நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது-ராஜித சேனாரத்ன

277 0

download-3நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன..

அரசாங்கத்திற்கு நிரந்தரமான ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. ஒவ்வொரு அமைப்புகளுக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எந்தவொரு விடயத்தையும் முன்மொழிய முடியும். வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் இடம்பிடிக்க மாட்டார்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. தொழில்நுட்ப அறிவு, சட்ட ஆலோசனைகளுக்கு மாத்திரம் வெளிநாட்டு பிரதிநிதிகள் சமூகமளிக்க முடியும்.

எனினும், நீதிபதிகளாக இலங்கையர்கள் மாத்திரமே அந்த இடத்தில் அமர முடியும். அரசாங்கத்திற்கு எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்க முடியும் அல்லவா?. இவ்வாறான பல அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதன் பின்னர், அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்து அமைச்சரவையே தீர்மானத்தை எட்டும். இந்த அறிக்கை குறித்து ஆராய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனினும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போதில்லை என்பதனை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். அதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்து விட்டார்கள். இலங்கைக்கு வந்த இளவரசர் செயிட் அல் ஹ{ன்னும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

என மேலும் குறிப்பிட்டார்.