பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

336 0

14-1410686201-rajnath-singh43-600பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை எதிர்காலத்திலும் இது போன்ற அரசியலை நடத்தாது.

அவ்வாறு நடத்தியிருந்தால், லோக்சபாவில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்க முடியாது. உத்தர பிரதேச தேர்தல் களத்தில் மத ரீதியிலான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்வைக்காது.

மதம், ஜாதியை முன்வைத்து வாக்குக் கேட்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் சரியான தீர்ப்பு. அத்தீர்ப்புக்கு இணங்கவே பாரதிய ஜனதா கட்சி செயல்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மதச்சார்பின்மை என கூறி கொள்ளும் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.என்று இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.