முடக்கல் நிலை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர்; வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில வாரங்களிற்கு முன்னர் 5000த்தை நெருங்கியது என தெரிவித்துள்ள அவர் தற்போது 3000க்கும் குறைவாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 5000 நோயாளிகள் அடையாளம்; காணப்பட்டால் அது மருத்துவதுறை மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உங்களால் உணரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலக்கை அடைவது சுலபம் ஆனால் பெற்றுக்கொண்ட பலாபலன்களை தக்கவைப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசமற்றும் தனியார் துறையினரிடம் 264 நிலையங்களி;ல் கொவிட் 19 நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கு39222 கட்டில்கள் உள்ளன எனஅவர் தெரிவித்துள்ளார்.
இதில் 70 வீதமான கட்டில்கள் தற்போது நிரம்பிவிட்டன,ஆனால் சில வாரங்களிற்கு முன்னர் 90 வீதம் நிரம்பியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களிற்கு முன்னர் 1004 நோயாளிகளிற்கு ஒக்சிசன் தேவைப்பட்டது,தற்போது இந்த எண்ணிக்கை 802 ஆக குறைவடைந்துள்ளது என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர்; வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தினால் தற்போதைய நிலை தொடரும் என நாங்கள் கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் அன்டிஜென் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் ஆபத்தான பகுதியில் கொரோனா ஆபத்துள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்,அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட சோதனைகளை நிறுத்திவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையாததை சுட்டிக்காட்டியுள்ள அவர் முடக்கல் நிலையின் சாதகமான விளைவுகள் உயிரிழப்புகளில் பிரதிபலிக்கவில்லை,சில நாட்கள் மருத்துவமனைகளி;ல் அனுமதிக்கப்பட்ட பின்னரே ஒருவர்உயிரிழக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் அதிகரிப்பதால் சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.