நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை, முச்சக்கரவண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மூன்று சந்தேகநபர்களையும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்தனர்.
குருநாகல் பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்வதற்காக இவை எடுத்துவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மஹய்யாவ, தென்னேகும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.