நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

355 0

jvp-jaffநல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண மாட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாட்டை விற்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி கட்சியினரால் இன்று யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டின் வளங்கள் வெளிநாட்டிற்கு விற்கப்பட இருப்பதாகவும்

மக்களுடைய சொத்துக்கள் மற்றும் உடமைகள் வெளிநாட்டு கம்பனிகளிடம் கையளிக்கப்பட இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண மாட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் தற்போதைய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுளளதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் உட்பட அம்பாந்தோட்டை, அம்பிலிப்பிட்டிய மற்றும் மொனராகல பிரதேசங்களில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண மாட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் குற்றம் சுமத்தியுள்ளார்.