மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

306 0

download-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவிருந்த பாதுகாப்பு தலைமை அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கொழும்பில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.