ஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இரவு விடுதி ஒன்றில் புதுவருட கொண்;டாடத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் மேலும் 27 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபர் இனங்காணப்பட்டுள்ளதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் அவரது பெயர் உள்ளிட்ட விடயங்களை வெளியிடவில்லை.
இவ்வாறாயினும் இந்த தாக்குதல் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்த நாள் திங்கட் கிழமை, இந்த தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஐ.எஸ் அமைப்பினர் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.