தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்றும் கூடியது.
சபை முதல்வர் தினேஸ்குணவர்தன தலைமையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்றைய தினம் கூடியிருந்தது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைத்திருந்தது.
அதேநேரம், மாகாணசபை தேர்தல் முறைமையில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிந்து அது தொடர்பான தீர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, எமது மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.