வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

323 0

vavuniya_sports_3மாவட்ட அரச களஞ்சியங்களில் உள்ள நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையார்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வவுனியாவில் தற்போது நெல் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனை நிவர்த்தி செய்ய மாவட்ட அரச களஞ்சியங்களில் உள்ள நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையார்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதனால் வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர்கள் நட்டமடைவதுடன் ஊழியர்களும் வேலை இழக்கின்ற நிலை ஏற்படும்.

அத்துடன் மழை வீழ்ச்சி தற்போது குறைவாக உள்ளமையினால் இந்த வருட நெற்செய்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் எதிர்வரும் மாதங்களில் கடும் நெல் தட்டுப்பாடு வவுனியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.