இந்திய வெளிவிவகார அமைச்சின் நட்புறவு அதிகாரி சஞ்சே பாண்டே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டார்.
இந்திய அரசினால் அமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணத்தில் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படுகின்ற கலாசார மண்டப அமைவிடத்தையும் பார்வையிட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் கச்சதீவில் புதிதாக அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தையும் தனது ஒருநாள் விஜயத்தில் பார்வையிட்டதாக குறிப்பிட்டார்.