பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பணிப்புக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் பொது சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டமையை அடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளனர்.
இடமாற்றம் வழங்கப்பட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தை நிறுத்துவது பொது சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றக்கொள்கையில் தொழில் சங்கங்களின் ஆலோசானைகளை உள்வாங்கிக் கொள்வது, இடமாற்ற சபையில் தொழிற்சங்க உறுப்பினர்களை இணைந்துக் கொள்ளல் ஆகிய விடயங்களில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் இடமாற்றத்தை விரும்புபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் எனவும், 5 வருடங்களை பூர்த்தியாக்கியவர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனவும், இடமாற்றத்திற்கு விரும்புபவர்கள் இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், இடமாற்றக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை திருத்தங்களை இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 30 அல்லது 31 ஆம் திகதி இடம்பெறும் மீள்பரிசீலனை சபையிலும் பொது சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறமுடியும் எனவும் இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானம் இறுதி முடிவாக அமையும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது