மாத்தறை நகரிலுள்ள உணவக வர்த்தகர் மீது தாக்குதல் (காணொளி)

360 0

shop-attakமாத்தறை நகரிலுள்ள உணவகமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வர்த்தகர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மூன்று பேரை கொண்ட குழுவொன்றினால் குறித்த வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த நபர்கள் வர்த்தகருக்கு கத்தியை கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வர்த்தக நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.