ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்தது

416 0

f1-2ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு வருடகாலமாக நிலவிய ராஜதந்திர முறுகல் நிலை முடிவுக்கு வந்ததுள்ளது.
துருக்கி ஜனாதிபதி மன்னிப்பு கடிதம் எழுதியதை அடுத்தே இந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் இராஜதந்திர ரீதியாக முறுகல் ஏற்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் சிரிய நாட்டு எல்லையில், ரஷ்ய போர் வானுர்தியை துருக்கி சுட்டு வீழ்த்தியது.
இதனை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், துருக்கி ஜனாதிபதி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ அறிவித்ததை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புடின் அந்த தடையை நீக்கினார்.
தீவிரவாத தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சுற்றுலா துறையில், ரஷ்ய சுற்றுலா பயணிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.