வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவும் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
இது தொடர்பில் முன்னதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தின் கால எல்லை 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதன்போது நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் குறித்த புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கே தற்போது அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.