பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன

280 0

pakistan-ship-04-01-2017பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.

பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளன.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் இரு கடல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதருகின்றன.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அஷ்பாக் அலி, இலங்கையின் கடற்படை, கரையோரப் பாதுகாப்பு படை மற்றும் மேல் மாகாண கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படையின் உயர் தளபதிகளை இந்த விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நாளை தொடக்கம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை தரித்து நிற்கும்.

இந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கரப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்களிலும் கடல்சார் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளனர்.