கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களுக்கு MIS-C நோய் – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை

232 0

கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு 14 நாட்களுக்குப் பின்னர் , பல சிறுவர்கள் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் (MIS-C ) எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருப்பின், தாமதிக்காமல் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இது சிக்கல்களுக்கு வழிவகுக்காது என வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர்.ஜி. விஜேயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொவிட் -19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் சுமார் 50% தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தவிர டெங்கு நோய்களும் பதிவாகி வருவதை சுட்டிக்காட்டிய அவர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.