ஒன்றிணைந்த எதிர்கட்சி முறைப்பாடு

253 0

bondஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கும் போது அரச நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தியதாக கூறி ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த யாப்பா அபேவர்த்தன, ரஞ்சித் சொய்சா, பவித்ரா வன்னியாராச்சி, பியல் நிஷாந்த ஆகியோர் கையளித்துள்ளனர்.