பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தம்புள்ளை மற்றும் பிற பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் விவசாயிகளைப் பாதுகாக்க இறக்குமதி வரி விதிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.