கப்ரால் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தீர்மானம்-மீண்டும் மத்திய வங்கி ஆளுநராகின்றார்?
அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது இராஜங்க அமைச்சர் பதவி மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக லங்காதீபவுக்குத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்குமாறு அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அஜித் நிவாட் கப்ரால் இந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றி வரும் டபிள்யூ.டி.லக்ஸ்மன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றி வருபவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கப்ரால் தற்போதைய பதவியிலிருந்து விலகுவதாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.