பாடசாலைகளை ஆரம்பிக்கத் தயார்; சுகாதார பிரிவின் ஆலோசனைக்காகக் காத்திருக்கிறோம்: கல்வி அமைச்சின் செயலாளர்

215 0

சுகாதாரத் துறையினர் அனுமதி வழங்கினால் பாடசாலைகளை உடனடியாக திறக்கத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக மாகாண கல்வி அதிகாரி களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான திட்டத்தை இந்தக் கலந்துரையாடலின் பிறகு கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கடந்த காலத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாடசாலை நடத்திய முறை இந்த நாட்களில் மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 88 வீதமான ஆசிரியர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.