கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 வேகமாகப் பரவுகிறது!

204 0

தற்போது கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 பரவலானது வேகமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு ஒட்சிசன், அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் விகிதம் என்பன அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொவிட் -19 தடுப்பூசியைப் பெற வேண்டும். ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் அதிக சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும், எனவே, அவர்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என குடும்ப நல பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.