அத்தியாவசிய சேவைகளின் ஆணையர் நாயகம் ஏனைய பொது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளார்

186 0

அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பொது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளார் என ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளின் ஆணையர் நாயகம் பொதுப் பாதுகாப்பு ஆணையின் பிரிவு 5 -க்கு உட்பட்ட பொது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைத்து நுகர்வோரை சிரமத்திற்குள்ளாக்குவதைத் தடுக்க அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி அமல்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.