இஸ்ரேல் சிறையில் இருந்து 6 கைதிகள் தப்பியதை பாராட்டி பாலஸ்தீன அதிபர் முகம்முத் அப்பாஸின் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான சில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை ஹீரோக்களாக கொண்டாடும் பாலஸ்தீனிய மக்கள், சிறையில் இருந்து அவர்கள் தப்பியோடியதை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாலஸ்தீன அதிபர் அலுவலகம் இது குறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.