கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

292 0

jvp-04-01-2017-4அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட பொதுச் சொத்துக்களை

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் இன்று ஆரம்பமானது.

புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு, மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரால் விநியோகிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துநெத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் 5000 ஏக்கர் காணியை முதலீடுகளை மேற்கொள்வதற்காக சீனாவுக்கு வழங்க நல்லாட்சி அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தமும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற எதிர்வரும் 8ஆம் திகதியன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் எழுப்பிவரும் மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து நாடாவிய ரீதியில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

jvp-04-01-2017-4 jvp-04-01-2017-3 jvp-04-01-2017-2 jvp-04-01-2017-1