வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று, ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை(06) இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதான அனுஸ்க அபயரத்தின லக்மால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது