கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் ஒருவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு மந்திகை மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் குணமடைந்தார் என வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதவேளை கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 85 வயதுடைய பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு வந்து சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.