யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,  லண்டன் மாநகரின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபிக்கும் இடையில் சந்திப்பு (காணொளி)

333 0

gaயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் லண்டன் மாநகரின் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன.

மீள்குடியேற்றம், யுத்தம் காரணமாக வெளிநாடுகளிற்கு இடம்பெயர்ந்து வாழும் புலம்பெயர்மக்கள், சட்ட விரோத வெளிநாட்டுப்பயணங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல பொது விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.