காஷ்மீரில் வன்முறைகள்

370 0

JK_Unres_2926376fஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன
இதன்போது 3 காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து பந்திப்பூரா, காசிகுண்ட், லார்னூ, அனந்தனாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் காவல்துறை சோதனைச் சாவடிகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் புர்ஹான் வானியின் சொந்த ஊரான டிரால் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் பரவி வருவதால் தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் கையடக்க தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டோவாக இருந்து வந்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார் என்றும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.