முகவர்களின் முடிவு குறித்து லொத்தர் சபை கவலை

295 0

744375562untitled-1லொத்தர் விற்பனை முகவர்கள் தொடர்பில் பெற்றுக் கொடுக்கும் தரகுக் கூலியை அதிகரிக்க தீர்மானித்துள்ள போதும், அதற்கு அவர்கள் இணங்காமையானது கவலைக்குரிய விடயம் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
அவர்கள் கோரும் தரகுக் கூலியை பெற்றுக் கொடுக்க தமது சபைக்கு இயலாது என தேசிய லொத்தர் சபையின் தலைவர் ஷாமிலா பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அதிகரிக்க இணங்கியுள்ள தரகுக் கூலி குறித்து சந்தேகம் இல்லை என, அனைத்து இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கத்தின் பொருலாளர் அமில தியூணுகே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லொத்தர் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதும், பரிசுத் தொகை அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.