அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யு புஷ் ஆகியோர் குறித்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.