யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்வெட்டுக்களுடன் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற காவல்துறையினர் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், ஈழம் என்றால் என்ன? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்