அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருப்பதன் ஊடாக உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது – கபீர் ஹசீம்

194 0

பொருளாதாரத்தை சீர்செய்வதற்காக சுற்றுலாப்பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் வரவழைப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருப்பதன் ஊடாக நாட்டில் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது என்ற நிலைப்பாட்டையே சர்வதேசத்தின் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.

உணவுப்பொருட்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு எந்தவொரு வெளிநாட்டவரும் விரும்பமாட்டார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுவரும் முறையற்ற கொள்கைகள் திருத்தியமைக்கப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 250 ரூபாவரை வீழ்ச்சியடையும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.