பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

318 0

201604020959009203_escaped-prisoner-in-palayamkottai-jail-prison-guards_secvpfபிலிப்பைன்ஸில் சிறைச்சாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், ஒரு சிறை அதிகாரியும், ஒரு கைதியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் ஆயிரத்து 511 கைதிகள் உள்ளதாகவும், அவர்களுள் 158 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலை காவலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைதுசெய்ய பிலிப்பைன்ஸின் படையினரும், காவல்துறையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.