கொவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட முறையீடுகளை மாவட்ட செயலாளர் களிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.