மிலேச்சத்தனமான பயங்கரவாத நிலைமையை மீண்டும் அடையாளம் கண்டு நடவடிக்கையெடுப்பதற்கான அவசியம் சர்வதேசத்தின் ஊடாக உருவாகியுள்ளதென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து நாடாளுமன்றத்தில் இன்று (06) திங்கட்கிழமை, உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய கொடூரமான பயங்கரவாதி எமது நாட்டில் பிறந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. கவலைக்குரிய இந்த கொடூரமான செயற்பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.