ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!-போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன

280 0

babyவவுனியா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிர சவத்திருந்த நிலையில் அவை போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

அதில் நேற்று முன்தினம் மாலை இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மற்றொரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

புத்தாண்டு தினத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் நிறை குறைந்து காணப்பட்டதன் காரணமாக சிறுவர் (குழந்தை) சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை யளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மூன்று குழந்தைகளும் உயிரிழக்க நேரிட்டுள்ளது.