இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் உயிரிழப்புகள் ஏற்படும் போது, பணம் வழங்கக் கூடியவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அமரர் ஊர்தியின் மூலம் சடலங்களை ஏற்றி இருக்கின்றது என்றார்.
‘அதேநேரம் வசதியற்றவர்களுக்கு இலவசமாக சடலங்களை ஏற்றி இறக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதுடன், ஏனைய வசதிகள் சிலவற்றையும் மேற்கொண்டு வருகின்றது.
‘கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் என்ற அடிப்படையில் ஏனைய வைத்தியசாலைகளில்; இருந்தும் சடலங்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
‘தற்போதைய சூழல் சடலங்களை ஏற்றி இறக்குவதில் வசதியீனங்கள் காணப்படுமானால், கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும்’ எனவும், அவர் தெரிவித்தார்.