ஶ்ரீலங்கன் விமான சேவை வௌியிட்டுள்ள அறிக்கை

168 0
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என ஶ்ரீலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.