தாயுடன் விறகு வெட்டச் சென்ற 25 வயதுடைய யுவதியை காணவில்லை!

150 0

பூண்டுலோயா – டன்சின் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த யுவதி டன்சின் வனப்பகுதியில் தனது தாயுடன் நேற்று முற்பகல் விறகு வெட்டச்சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.