மலையக வீதிகளில் கடும் மழையுடன் பனிமூட்டம்-சாரதிகளுக்கு எச்சரிக்கை!

164 0

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.

இதனால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் மழையுடன் பனி மூட்டமும் நிலவிவருவதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை பாதையில் உரிய பக்கத்தில் செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீரேந்து பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை காரணமாக மேல் கொத்மலை, கெனியோன், லக்ஷபான, நவலக்ஸபான,காசல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் உயர்வடைந்து வருகின்றன.