மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேருக்கு இன்று திங்கட்கிழமை (06) பொது சந்தை சதுக்கத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் உறவினர்கள் அவர்களது வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை மட்டக்களப்பு பொது சந்தை கட்டடப்பகுதியில் அழைத்துவரப்பட்ட 62 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.