யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களை 15.09.2021வரை சமர்ப்பிக்கலாம்!

158 0

யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களையும், அவர்களுடைய காணி முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பாவனை காரணமாக இதுவரை மீளக்குடியமராத குடும்பங்கள் தங்களுடைய விபரங்களையும், பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்களை குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கமைவாக விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிதிகதி 15.09.2021 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்காக யாழ் மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lkஎனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது