நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்க எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடுகளை மிகக் கடுமையான முறையில் செயற்படாவிட்டாலும் தற்போது நடைமுறையியேலே எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நீடிப்பது சிறந்தாக அமையும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.