ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது எனக் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும், சில கடைகளுக்குக் கோதுமை மா வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனிக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந்தாலும்,விதிக்கப்பட்ட மொத்த விலையில் சீனி வழங்கப்படாது என்றும், வழங்கல் மட்டுப்படுத்தப்படும் என்றும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இறக்குமதி நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.