ஜோர்ஜ் மாஸ்டர் மிகுந்த தமிழ் தேசப்பற்றாளர்!-எரிக் சொல்ஹெய்ம்

325 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளின்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் எங்களுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் மாஸ்டர் பணியாற்றினார்.

அவர் மிகுந்த தமிழ் தேசப்பற்றாளர். சமாதானத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.