பாராலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பாராலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
டோக்கியோ பாராலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு மற்றுமொரு தங்க பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ள கிருஷ்ணா நாகருக்கு எனது பாராட்டுக்கள். தமது ஆட்டத்தில் அவர் முழுமையான ஆதிக்கம் செலுத்தி விளையாடி இருக்கிறார்.
மேலும், வெள்ளிப்பதக்கம் வென்று, பணியில் இருக்கும் போதே பாராலிம்பிக் பதக்கம் பெறும் முதல் இந்தியக் குடிமைப் பணி அலுவலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சுகாஷ் யத்திராஜூக்கும் எனது பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.