பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை

271 0

1791787875court2பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கின், சாட்சி விசாரணைகளை தொடர்ச்சியாக பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மார்ச் 24ம் திகதி முதல் தொடர்ந்தும் சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள, நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதே, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இவ்வாறு அச்சறுத்தல் விடுத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு வாஸ் குணவர்த்தன மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.