இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது

204 0

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளால் ஆபத்து விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,011 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது.
இதேபோல், ஒரே நாளில் 68 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 12.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.