நாடுகடத்தப்பட்டார் தென்கொரிய பிக்கு

450 0

monk-buddhistகோட்டே நாகவிகாரையின் தலைமை விகாராதிபதி பதவிக்காக போட்டியிட்டிருந்த தென்கொரியாவின் பிக்கு யுங் மூன் ஒவ் நேற்று நாடு கடத்தப்பட்டார்.

குறித்த விகாரையில் தங்கியிருந்த நிலையில் அவர் அமைச்சர் எஸ். பி. நாவின்னவின் உத்தரவின்பேரில் அவர் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரைக்கு சென்ற குடிவரவு அதிகாரிகள், மீரிஹான பொலிஸாரி;ன் உதவியுடன் அவரை நாடு கடத்தினர்.

குறித்த தென்கொரிய பிக்கு, 2000 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இவ்வாறு நான்காவது முறையாக வந்தபோது இலங்கையிலேயே அவர் தங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.