அமெரிக்க ஓபன் டென்னிஸ் – நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி

189 0

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி, உலக தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதினார்.
முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வென்றனர். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஆரம்பத்தில் ஆஷ்லே பார்டி ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால் ஆஷ்லே பார்டி அடுத்தடுத்து செய்த தவறுகளால் அந்த செட்டை 6-7 என கோட்டை விட்டார்.
இறுதியில், ஷெல்பி ரோஜர்ஸ் 6-2, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். நம்பர் ஒன் வீராங்கனை ஒருவரை 28 வயதான ஷெல்பி ரோஜர்ஸ் வீழ்த்தியதும் இதுவே முதல் தடவையாகும்.